மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – செயல் இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம்!!

0

மதுரை தோப்பூரில் அமையவுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையின் செயல் இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் இந்தியாவிலுள்ள மிக முக்கியமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவ கல்லூரி ஆகும். இந்த அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) இந்தியா முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளது. புதுடெல்லியை மையமாக கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழுமத்தின் மருத்துவமனை புதுடெல்லி, போபால், பாட்னா, புவனேஷ்வர், சோத்பூர், ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் – விற்பனையில் புதிய சாதனை!!

இந்த எய்ம்ஸ் குழுமத்தின் கீழ் இருக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் செயல் இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இயக்குநராக, திருப்பதி எஸ்வி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் டீனாக உள்ள மூத்த பேராசிரியர் ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல ஜம்மு மாநிலம் விஜய்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநராக சக்தி குமார் குப்தாவும், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநராக தேவ் சிங் கடோச் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் அமையவுள்ள மருத்துவமனையின் இயக்குநராக விர் சிங் நேகி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here