போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் – விற்பனையில் புதிய சாதனை!!

0

தற்போது போக்கோ நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான எம் 3 ஸ்மார்ட் போனை விற்பனை செய்து வருகிறது. இந்த போனின் விற்பனை தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது.

போக்கோ:

தற்போது இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் போக்கோ நிறுவனம். இந்த நிறுவனம் தனது போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனின் அறிமுகத்திற்கு பின்பு இந்தியாவில் இந்த மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மேலும் பயனாளர்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. தற்போது வரை இந்த ஸ்மார்ட்போன் 2,50,000கும் அதிகமான யூனிட்கள் விற்பனை ஆகி புதிய சாதனையை படைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிளிப்கார்ட் தலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த போனை வாங்குவதற்கு பிளிப்கார்ட்டில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது விருப்பங்களை தெரிவித்தனர். தற்போது இதனை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட விற்பனை இன்று முதல் துவங்குகிறது. இந்த போன் 6.53 இன்ச் டிஸ்பிலே கொண்டுள்ளது. மேலும் இந்த போன் 6 ஜிபி ரேம் வசதியை பெற்றுள்ளது. அதேபோல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என்னும் இரண்டு மாடலாக இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 வெர்சனை உடையது. மேலும் இதன் பின்பக்க கேமரா 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மைக்ரோ கேமரா ஆகிய தன்மையை கொண்டது. அதேபோல் இதன் செலஃபீ கேமரா 8 எம்பி தன்மையை உடையது. இதன் சார்ஜிங் வசதி சி டைப்பை கொண்டது. மேலும் இதன் பேட்டரி தன்மை 6000mAh மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் தன்மையை கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here