பிரபல துப்பாக்கி சுடும் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
பிரபல துப்பாக்கி சுடும் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல துப்பாக்கி சுடும் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன் வீர் சிங் பிரார் மொகாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீரர் தற்கொலை:

தேசிய துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான 29 வயது மிக்க நமன்வீர் சிங் பிரார், மொகாலியில் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரார், இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இரட்டை டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை புரிந்துள்ளார். அவரது இந்த சாதனை சாதிக்கும் இளைஞர்களுக்கு ஒரு மிக பெரிய உந்து சக்தியாக விளங்கியது.

பிரபல துப்பாக்கி சுடும் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல துப்பாக்கி சுடும் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இது மட்டுமல்லாமல், அவர் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், சமீப காலமாக இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் சார்ந்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.அதாவது, நேற்று அதிகாலை இவரது வீட்டில் உள்ள அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

பிரபல துப்பாக்கி சுடும் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல துப்பாக்கி சுடும் வீரருக்கு நேர்ந்த பரிதாபம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்த சத்தம் கேட்டு, குடும்ப உறுப்பினர்கள் சென்று பார்த்த போது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதன் பிறகு அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, நமன் வீர் சிங் தன்னுடைய அறையில் தனது உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அதிகாலை 3:35 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டதாக உறுதிப்படுத்தினர். இவரின் இந்த திடீர் தற்கொலை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here