மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்… ட்ரை பண்ணி பாருங்களே!!

0
மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்... ட்ரை பண்ணி பாருங்களே!!
மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்... ட்ரை பண்ணி பாருங்களே!!

காலையில் நாம் உண்ணும் உணவு நமக்கு அந்த நாள், முழுவதையும் உற்சாகமானதாக மாற்றிவிடும். மேலும் அந்த உணவு நமக்கு வலு தரக்கூடியது. அதிலும் மனதிற்கு விருப்பமான உணவு என்றால் அந்த நாள் முழுவதும் மனமும் வயிறும் நிரம்பி இருக்கும். இந்நிலையில் நாம் இந்த பதிவில் சுவையான சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல் செய்வது எவ்வாறு என்பதை காண்போம்.

மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்... ட்ரை பண்ணி பாருங்களே!!
மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்… ட்ரை பண்ணி பாருங்களே!!மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்… ட்ரை பண்ணி பாருங்களே!!

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்

கோதுமை மாவு – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

சிக்கன் – 250 கிராம்

எண்ணெய்

சீரகம் – 1/2 தேக்கரண்டி

வெங்காயம் – 1

சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

தக்காளி – 2

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

முட்டை – 2

மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்... ட்ரை பண்ணி பாருங்களே!!
மார்னிங் டிபனுக்கு ஏற்ற சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல்… ட்ரை பண்ணி பாருங்களே!!

செய்முறை:

முதலில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த மாவை 15 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும். இந்நிலையில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம்,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், சாட் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்கி வைத்து உள்ள சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். இந்நிலையில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி கீரை சேர்த்து கிளறி கொண்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் பிசைந்து வைத்து உள்ள மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி கொண்டு அடுப்பில் போட்டு இருபுறமும் லைட்டாக வேக வைத்து எடுத்துக் கொண்டு, அதன் ஒரு பக்கத்தில் கலக்கி வரித்து உள்ள முட்டையை ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் சிக்கன் கலவையை சப்பாத்தியின் உள்ளே வைத்து ரோல் பண்ணி கொண்டு பரிமாறவும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here