குஜராத் தொங்கு பாலத்தின் விபத்து பின்னணி., ரூ.2 கோடி நிதியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவானது அம்பலம்!!

0
குஜராத் தொங்கு பாலத்தின் விபத்து பின்னணி., ரூ.2 கோடி நிதியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவானது அம்பலம்!!

குஜராத் மாநிலத்தின், மோர்பியில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் அண்மையில் இடிந்து விழுந்ததில் 135 பேர் இறந்த நிலையில், இந்தப் பால விபத்தின் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்கு காரணம் :

குஜராத் மாநிலத்தில், மோர்பியில் அமைந்துள்ள 143 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள், ஒன்றுகூடி இந்த பாலத்தில் நின்று பண்டிகையை கொண்டாடிய போது இந்த அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் 135 பேருக்கு மேல் இறந்து போயினர். இறந்தவர்களுக்கு ஆறுதல் செய்தி வெளியிட்டு, பேசிய பிரதமர் மோடி பேச கண்கலங்கினார். விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிலையில், இந்தப் பாலம் இடிந்து விழுந்ததற்கான பகீர் காரணம் ஒன்று வெளியாகி உள்ளது.

16,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு – 85% நபர்கள் பலனைடைவு! விப்ரோ நிறுவனம் அதிரடி!!

அதாவது, இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2 கோடி நிதியில், 12 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல் பாலத்தின் கேபிள் மற்றும் துருப்பிடித்த பிற பகுதிகளை மாற்றுவதற்கு பதிலாக, பெயிண்டிங் மற்றும் கிரீசிங் போன்ற மேலோட்ட பணிகளை செய்து கணக்கு காண்பிக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இந்த தகவல் தற்போது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here