டெலிகிராமில் வரப்போகும் புது அப்டேட் – கூகிள், ஜூம் செயலிகளுக்கு ஆப்பு..!

0

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டினுள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களை ஒன்றிணைப்பதில் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. அதிலும் வீடியோ கால் வசதி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெலிகிராம் குரூப் வீடியோ கால் வசதியை தனது செயலியில் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டு உள்ளது.

வளரும் தொழில்நுட்பம்:

உலகத்தில் கொரோனாவால் தொழில் துறைகள் மிகப்பெரிய பாதிப்பையும், இழப்பையும் சந்தித்து வருகின்றன. மறுபுறம் நெட்பிலிக்ஸ் போன்ற ஆன்லைன் மூவி செயலிகளும், கூகிள், ஜூம் மற்றும் ஸ்கைப் போன்ற ஆன்லைன் குரூப் வீடியோ மீட்டிங் செயலிகளும் அசுர வளர்ச்சி அடைந்து உள்ளன.

வீட்டில் இருக்கும் பொதுமக்களும், வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களும் அதிகளவில் இதனை பயன்படுத்துவதால் மிகப்பெரிய லாபத்தை இந்நிறுவனங்கள் அடைந்து உள்ளன.

டெலிகிராம் அப்டேட்:

தற்போது டெலிகிராம் தனது பயனர்களுக்கு விரைவில் பாதுகாப்பான குரூப் வீடியோ கால் வசதியை வழங்க உள்ளது. இதற்கான பணிகளில் எந்தவித சத்தமுமின்றி அந்நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் மாதாந்திர டெலிகிராம் பயனர்களின் எண்ணிக்கையும் 400 மில்லியன் அளவிற்கு அதிகரித்து உள்ளதால் அப்டேட்ஐ கொண்டு வர இதுதான் சரியான தருணம். இதனால் விரைவில் அப்டேட் வரவுள்ளது.

மேலும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் நிலைகளுக்குமான தரவுத்தளத்தை உருவாக்க ஆன்லைன் எஜிக்கேஷன் டெஸ்ட் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு 4,00,000 யூரோ (ரூ.3,30,13,200) விநியோகிப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here