
மத்திய அரசு ஊழியர்களுக்கு AICPI குறியீட்டின் படி, ஜனவரி மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படும் என AICPI குறியீட்டின் படி தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 50 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுபோன்ற சூழ்நிலையில் அகவிலைப்படி 0-ஆக மாற்றப்பட்டு, அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் உயர்த்தப்படும் என தகவல் கூறியுள்ளனர். அதாவது அடிப்படை சம்பளம் ரூ,18,000 பெறுபவர்களுக்கு ரூ.27.000ஆக உயர்த்தப்படும். இதனால் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
வரட்டா அப்பு.., சனாதனம் குறித்த கேள்விக்கு நைசாக நழுவி சென்ற வைகை புயல் வடிவேலு!!