அரசு வழங்கும் இலவச சைக்கிளின் விலை ரூ.200.., பள்ளி மாணவர்களின் அதிர்ச்சியளிக்கும் செயல்!!

0
அரசு வழங்கும் இலவச சைக்கிளின் விலை ரூ.200.., பள்ளி மாணவர்களின் அதிர்ச்சியளிக்கும் செயல்!!
அரசு வழங்கும் இலவச சைக்கிளின் விலை ரூ.200.., பள்ளி மாணவர்களின் அதிர்ச்சியளிக்கும் செயல்!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டி, குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலவச சைக்கிள்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 11 ம் வகுப்பு பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் “தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டித் திட்டம்” செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த திட்டம் தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு பேருதவியாக உள்ளது. ஏனெனில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் அதிகமானோர் கிராமங்களில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாநிலத்தில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2022-2023 கல்வி ஆண்டுக்கான, “இலவச சைக்கிள்கள்” வழங்கும் திட்டத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்பட்ட சைக்கிள்களை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் குறைந்த விலைக்கு, அதாவது 200, 300 ரூபாய்க்கு விற்று உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வு! கல்வித்துறை திட்டம்!!

மேலும் “நாங்கள் வசிப்பது மலைப்பகுதியான ஊட்டியில், இங்கு மேடு பள்ளமாக இருப்பதால், எல்லா இடங்களிலும் சைக்கிள்களில் செல்ல முடியாது” அதனால் இலவச சைக்கிள்களை குறைந்த விலைக்கு விற்றதாக பள்ளி மாணவ, மாணவியர் விளக்கம் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, சைக்கிள்களைப் பயன்படுத்த முடியாத பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேறு திட்டத்தை அறிமுகப்படுத்தினால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here