தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வு! கல்வித்துறை திட்டம்!!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - நாளை முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வு! கல்வித்துறை திட்டம்!!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - நாளை முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வு! கல்வித்துறை திட்டம்!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முக்கிய திட்டமிடலில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

கல்வித்துறை திட்டம் :

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகளில், 1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாளை காலாண்டு தேர்வு தொடங்குகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

1 முதல் 5ம் வகுப்பு வரை திறனறி மதிப்பீட்டு தேர்வு முறையிலும், 6 முதல் 12ம் வகுப்பு வரை வினாத்தாள் மதிப்பீட்டு முறையிலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள், வருகிற செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்து, அக்டோபர் 1 முதல் காலாண்டு விடுமுறை விடப்பட உள்ளது.

பிரபு தேவாவிற்காக இந்த காரியத்தை துணிந்து செய்த நயன்தாரா.., ஆனா கடைசில நடந்தது இதுதான்!!

இந்த விடுமுறைக்கு பின், அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது இந்த தேர்வுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே பாட வாரியான கால அட்டவணை தயாரிப்பு, வினாத்தாள் பங்கீடு உள்ளிட்ட முக்கிய திட்டமிடலில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here