வெந்து தணிந்தது காடு படத்தை புகழ்ந்த முன்னணி நடிகை.., இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட ஸ்டோரி!!

0
வெந்து தணிந்தது காடு படத்தை புகழ்ந்த முன்னணி நடிகை.., இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட ஸ்டோரி!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை முன்னணி நடிகை ஒருவர் பாராட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெந்து தணிந்தது காடு:

சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், மாநாடு படத்தின் மூலம் பழைய பார்முக்கு வந்து ரி என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சிம்பு. இந்த வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார் நடிகர் சிம்பு. இப்படம் இவர்களது காம்போவில் மூன்றாவது படமாகும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களது காம்போவில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் ஒன்றாக இருந்து வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற சிம்பு- திரிஷா காதல் காட்சிகள் கோலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் கெளதம் மேனன்-சிம்பு-த்ரிஷா மூவரின் காம்போவில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படம் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பரவியது. மீண்டும் இவர்களது காம்போவிற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

பிரமாண்ட படத்துடன் போட்டி போடும் தனுஷின் ‘நானே வருவேன்’ – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திரிஷா வெந்த்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த மூன்று நபர்களான சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளதாக மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். தற்போது இன்ஸ்டாவில் இந்த ஸ்டோரி வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here