துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் என்ற திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் ரிலீஸாகி 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் கருடன் படம் ரூ. 39 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/gaurudan-22.jpg)