ஷப்பா…இப்பவே கண்ண கட்டுதே..மஞ்சள் பூஞ்சை தாக்குதல்..! டுவிட்டரில் தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!!

0

கொரோனா மக்களை ஒருபக்கம் வாட்டியெடுக்க மறுபக்கம் என்ட்ரி குடுத்தது கருப்பு பூஞ்சை. இப்போது இந்த பூஞ்சையின் புதிய வெர்சன்கள் நாள்தோரும் கலர் கலராக வந்த வண்ணம் உள்ளன. தற்போது வரை இந்தியாவில் கறுப்பு, வெள்ளை, மஞ்சள் நிற பூஞ்சை நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோய் என்பது ஒருவகையான பூஞ்சைக் காளானால் ஏற்படும் இந்த தொற்று, 2002ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்ட ஒன்று. அரிதாகவே இந்நோய் மனிதர்களுக்கு ஏற்படும். மண், தாவரங்கள், உரம், மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. இந்த தொற்று ஏற்பட்ட பின்னர் பூஞ்சை சைனஸ், மூளை, நுரையிரல் எனப் பரவி உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது.

ஏற்கனவே உள்ள கருப்பு, வெள்ளை பூஞ்சை தொற்று தவிர, இன்று புதிதாக மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது ட்விட்டரில் படுவேகமாக பரவியதால் #YellowFungus என்ற ஹாஷ்டேக்கில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவான சில கருத்துக்கள் இங்கே காண்போம்…

‛‛என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை… கலர் கலரா வந்து மக்களை சாவடிக்கிறது. கறுப்பு, வெள்ளை, மஞ்சள், அடுத்து என்ன பின்க் நிறமா…” என்று ஒரு நெட்டிசன் ட்விட் செய்துள்ளார்.

வேறு ஒருவர், “கறுப்பு, வெள்ளையை தொடர்ந்து இப்போது மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல். எனக்கு என்னம்மோ இது சீனாவின் பயோ வார் போன்று தெரிகிறது”.

இன்னொருவரோ,  ‛‛இந்தியாவில் நடக்கும் மனித அழிவுக்கான போட்டி பந்தயத்தில் புதிய போட்டியாளராக மஞ்சள் பூஞ்சை உள்ளே நுழைந்துள்ளார்” என ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கருத்துக்களோடு நெட்டிசன்ஸ் பல மீம்ஸ்களும் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here