மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

0

தெலுங்கானா மாநிலத்தில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

ஊரடங்கு:

இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. ஓமைக்ரான் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நாளுக்கு நாள் உயரும் கொரோனாவால் குணமடைபவர்களின் எண்ணிக்கை - ஒரே நாளில் 32,198 பேர் டிஸ்சார்ஜ்!!

பல்வேறு நாடுகளில் ஓமைக்ரான் தொற்று தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த பெங்களூருவை சேர்ந்த 2 பேருக்கு முதலில் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

மேலும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தபட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தெலங்கானாவில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்கு விளக்கமளித்த பொது சுகாதாரத்துறை அமைச்சர், உள்ளூரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதனால் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் ஒவ்வொருவரும் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதன் மூலம் ஓமைக்ரான் பரவலை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here