சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘பணமில்லா சிகிச்சை’ – மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

0
Road accident

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு ‘விலையில்லா சிகிச்சை’ திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது பல உயிரிழப்புகளை தடுக்க பேருதவியாக இருக்கும்.

பணமில்லா சிகிச்சை:

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக மத்திய அரசின் இந்த புதிய திட்டம் இருக்கும். விபத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு ‘பொன்னான நேரம்’ (Golden Hour) உட்பட இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒவ்வொருவருக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிசெய்ய ரூ .2.5 லட்சம் வரை இலவசமாக பணமில்லா சிகிச்சையை அரசாங்கம் வழங்கும். இந்தக் கொள்கை விபத்தில் சிக்கும் வெளிநாட்டினரையும் உள்ளடக்கும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Car-Accident
Car-Accident

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்த பின்னர் மருத்துவமனைகள் எழுப்பியுள்ள கோரிக்கைகளை செயல்படுத்த ‘ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜான் ஆரோக்ய யோஜ்னா’ வை செயல்படுத்தி வரும் தேசிய சுகாதார ஆணையத்தில் (என்.எச்.ஏ) சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை இயக்க அதன் வலுவான தகவல் தொழில்நுட்ப தளத்தை பயன்படுத்தும்.

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 5 காவலர்கள் கைது – சிபிசிஐடி அதிரடி!!

இந்த திட்டத்திற்காக அமைச்சகம் தனது சொந்த பங்களிப்புடன் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒரு மோட்டார் வாகன நிவாரண நிதியை அமைக்கும். மேலும், பாதுகாப்பற்ற வாகனங்கள் மற்றும் ‘ஹிட் அண்ட் ரன்’ (Hit and Run) வழக்குகளில் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் செலவுகளை பொது காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். பாதுகாப்பற்ற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களுக்கான செலவுகளை சாலை போக்குவரத்து அமைச்சகம் ஏற்கும். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here