கொரோனாவை வென்ற பிரான்ஸ் – ஊரடங்கு முழுமையாக தளர்வு..!

0
emmanuel macron
emmanuel macron

கொரோனா ஆட்டம் இன்னும் சூடு குறையாமல் தான் இருக்கிறது.கொரோனவை கட்டுப்படுத்த பல நாடுகள் தவித்து வருகின்றன.வைரஸ்க்கான மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருக்கின்றன.ஆனால் பிரான்ஸ் அரசு கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக தெரிவித்து ஊரடங்கை முழுவதும் தளர்த்துவிட்டது.

ஆஸ்கார் விருதுகள் 2021 ஒத்திவைக்கப்படுமா..? இன்று முடிவு..!

பிரான்சில் ஊரடங்கு முழுமையாக தளர்வு

france lockdown over
france lockdown over

பிரான்ஸ் அரசு தனது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.வணிக நிறுவனங்களையும் திறக்க அனுமதித்துவிட்டது.பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார் அதில் பார்கள்,உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான எல்லா ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார்.வரும் 22ம் தேதி முதல் பிரான்ஸ் முழுவதும் கல்வி நிறுவனங்கள் உட்படஅனைத்தும் திறக்கப்படும் என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பிரான்சில் அதிபர் தொலைக்காட்சியில் உரை

france lockdown end
france lockdown end

பிரான்ஸ் அதிபர்  இமானுவேல் மேக்ரோன் தொலைக்காட்சியில் மக்களிடம் நேற்று பேசினார் அதில் அவர் கூறியதாவது – கொரோனா என்னும் பெரிய விசா கிருமியை ஒழித்து வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள்  ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது. எதிர்வரும் 22ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறுவர் பள்ளிகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளது. பிரஞ்ச் கயானா, மயோட தீவில் மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வு இல்லை. திங்கட்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும். ஜூலை 1 ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும்’ என கூறினார்.பிரான்சில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் பிரான்ஸ் அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. பிரான்சில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 300 பேரை பிடித்திருக்கும் கொரோனா, 29,407 உயிர்களை பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here