இன்ஜினியரிங் கல்லூரிகளில் ரூ. 1.5 லட்சம் கல்விக்கட்டண உயர்வு – AICTE பரிந்துரை

0

பி.இ., மற்றும் பி.டெக்., கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு 2020-21 முதல் 50% வரை கல்விக்கட்டணத்தை உயர்த்துமாறு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (AICTE) மாநில அரசுகளுக்கு பரிந்துரை கடிதம் எழுதி உள்ளது.

சம்பள உயர்வு..!

AICTE மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கல்வியாண்டு முதல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 50% வரை கல்விக்கட்டணத்தை உயர்த்துமாறும் மேலும் பேராசிரியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி 6 வது மற்றும் 7 வது சம்பளகமிஷனை கமிஷனை அமல்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை..!

தமிழகத்தில் உள்ள சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு ஆன கல்விக்கட்டணத்தை ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு நிர்ணயித்து வருகிறது. இந்த குழுவின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

2017ல் செய்யப்பட்ட மாற்றத்தின் படி சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் NBA அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு ரூ. 55,000 மற்றும் NBA வின் அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளுக்கு ரூ. 50,000 கல்விக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. தனியார் கல்லூரிகளில் NBA அங்கீகாரம் உள்ள படிப்புகளுக்கு ரூ. 87,000 மற்றும் அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு ரூ. 85,000 கல்விக்கட்டணம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது AICTE 50% வரை கல்விக்கட்டணத்தை உயர்த்த அறிவுறுத்தி உள்ளதால் ரூ. 1.5 லட்சம் வரை கல்விக்கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here