சம்பளம் போக இவ்வளவு எல்லாம் செலவு செய்ய முடியாது.. நயன்தாரா குறித்து காட்டமாக பேசிய தயாரிப்பாளர்!!

0

முன்னணி நடிகையாக உள்ள நயன்தாராவுக்கு சம்பளம் போக அதிகபட்ச தொகை செலவழிப்பதால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது என்று தயாரிப்பாளர் ராஜன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நயன்தாரா மீது காட்டம்:

தமிழ் திரையுலகத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.  பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது ஒரு படத்திற்கு 2 முதல் 4 கோடி சம்பளம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நபர் இவர் தான். இந்த நிலையில், அவரது சம்பளம் போக, அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து போகும் இதர செலவுகளையும் தயாரிப்பாளர்களே ஏற்க வேண்டியுள்ளது.

அவரின் பாடி கார்டு, ஹேர்டிரசேர், தனி கேரவன் என தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக பிரபல தயாரிப்பாளர் ராஜன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், இது போன்ற இதர செலவுகளை அவர் குறைத்து கொள்ள வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here