ரஜினிக்கு இவ்வளவு விஸ்வாசமா? “முத்து” படத்தை தூக்கிவிட பிரபல சேனல் கமலுக்கு செய்த செயல்.., என்ன தெரியுமா? 

0
ரஜினிக்கு இவ்வளவு விஸ்வாசமா?

தமிழ் சினிமாவில் 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் ஒருவொருக்கொருவர் போட்டி போட்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வந்தவர்கள் தான் ரஜினி – கமல். தற்போது வரை இருவரும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர்களின் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதாவது உலகநாயகன் கமல் நடித்த “ஆளவந்தான்” திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “முத்து” திரைப்படமும் கடந்த டிசம்பர் 8ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

தற்போது இரண்டு படங்களும் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினியின் முத்து திரைப்படம், 6 முதல் 7 லட்சங்கள் வரை வசூல் செய்துள்ள நிலையில் ஆளவந்தான் திரைப்படம் கிட்டத்தட்ட  15 லட்சத்துக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரஜினிக்கு பேவராக இருக்க நினைத்து கமலுக்கு எதிராக பிரபல சேனல் ஒரு வேலையை பார்த்துள்ளது. அதாவது அந்த பிரபல சேனல் நேற்று இரவு 10 மணிக்கு ஆளவந்தான் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினி படம் வசூல் செய்வதற்காக தான் இந்த வேலையை அந்த சேனல் செய்ததாக நெட்டிசன்கள்  பலரும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here