2023 கூகுளில் ஆதிக்கம் செலுத்திய டாப் 10 search லிஸ்ட்…, முதலிடத்தில் என்ன இருக்கும் தெரியுமா?? 

0
2023 கூகுளில் ஆதிக்கம் செலுத்திய டாப் 10 search லிஸ்ட்..
நடப்பு வருடத்தின் இறுதி மாதத்தில் இருக்கிறோம். இந்நிலையில், கூகுள் நிர்வாகம் இந்திய அளவில் அதிக தேடப்பட்ட டாப் 10 நிகழ்வுகளை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில், இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றியாக கருதப்படுவது நிலவிற்கு சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது தான். உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த இந்த சாதனையை தான், இந்திய அளவில் மக்களால் அதிகம் தேடப்பட்ட நிகழ்வில் முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக தேர்தலுக்கான முடிவுகள், இஸ்ரேல் தொடர்பான செய்திகள், பாலிவுட் நடிகர் சதீஷ் கௌசிக் இறப்பு, பட்ஜெட் தாக்கல் 2023, துருக்கியில் நடைபெற்ற நிலநடுக்கம், அதிக் அகமதின் படுகொலை, அமெரிக்க நடிகர் மேத்யூ பெர்ரி இறப்பு, மணிப்பூர் பயங்கரவாத செய்திகள் மற்றும் ஒடிசா ரயில் விபத்து ஆகிய இந்திய அளவில் மக்களால் அதிகம் தேடப்பட்ட டாப் 10 நிகழ்வுகள் என கூகுள் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here