விமானம் ஏரியில் விழுந்து பிரபல நடிகரும், அவரது மனைவியும் அகால மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரையும் ஈர்த்த டார்சான் திரைப்படம் மூலம் புகழின் உச்சியை அடைந்த டார்சன் லாரா மற்றும் அவரது மனைவியும் விமானம் ஏரியில் விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

டார்சன்:

காட்டில் விலங்குகளுடன் வளரும் ஒரு குழந்தையை மையப்படுத்தி டார்சான் திரைப்படம் எடுக்கப்பட்டது. இது குழந்தைகள் இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்தது. 1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சன் இன் மன்ஹாட்டனில்” எனும் ஒரே திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சியை அடைந்தவர். பின்னர் அவர் 1996-1997 வரை வெற்றிகரமாக ஓடிய “டார்சன்: தி எபிக் அட்வெஞ்சர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

1999ல் டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவி கணவனும் மனைவியும் நிர்வகித்து வந்தனர். அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்றின் மூலம் விமானி உட்பட 7 பேர் பயணம் செய்தனர். புறப்பட்டு சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த விமானி உட்பட 7பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here