படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

0
படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்:

கடந்த 2012 – 2020 ஆம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே.இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் நரா என்ற நகரத்தில் சாலை பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே கலந்து கொண்டார்.

ஆனால் எதிர்பாராத விதமாக மர்ம நபரால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.இந்தத் தகவலை ஜப்பான் நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷின்சோக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜப்பானின் முன்னாள் பிரதமரின் மறைவிற்கு இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here