குணசேகரனுக்கு வந்த பேராபத்து.., கதிர் என நினைத்து உண்மையை உளறிய வளவன்.., எதிர்நீச்சல் அப்டேட்!!!

0
குணசேகரனுக்கு வந்த பேராபத்து.., கதிர் என நினைத்து உண்மையை உளறிய வளவன்.., எதிர்நீச்சல் அப்டேட்!!!
குணசேகரனுக்கு வந்த பேராபத்து.., கதிர் என நினைத்து உண்மையை உளறிய வளவன்.., எதிர்நீச்சல் அப்டேட்!!!

எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா கண் முழித்ததில் இருந்து அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பக்கம் ஜீவானந்தத்தின் மனைவி இறப்புக்கு குணசேகரன் தான் காரணம் என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. ஆனால் இதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லாததால் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கதிருக்கு ஒரு போன் கால் வர அதை சக்தி எடுத்து பேசுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

போனை சக்தி எடுத்தது தெரியாமல் வளவன் டேய் கதிர் ஜீவானந்தம் பயலே உங்க பேச்சை கேட்டு தான் கொல்ல திட்டம் போட்டேன். பிளான் ஏதோ மிஸ் ஆனதுல அவன் பொண்டாட்டி செத்துப் போயிட்டா. இதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று சொல்ல ஜனனி, சக்தி ரேணுகா எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் அடுத்து வரும் எபிசோடுகளில் ஜீவானந்தம் குணசேகரனை பழி வாங்குகிறாரோ இல்லையோ?? ஜனனி சும்மா விடமாட்டார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாகலமாக நடந்து முடிந்த வனிதா மகளுடைய நிச்சயதார்த்தம்., வைரலாகி வரும் புகைப்படம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here