#INDvsENG டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணிக்கு ஏற்படும் சிக்கல்!!

0

இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்காக தற்போது இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேராக சென்னை வந்துள்ளது. இங்கு வந்த இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். தற்போது இவர்களுக்கு புதிதாக ஓர் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டி, 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது முதற்கட்டமாக டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. அதிலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை மைதானத்தில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் வைத்து நடக்கவுள்ளது. இதற்காக சில இந்தியா அணி வீரர்கள் இன்று சென்னைக்கு வந்துள்ளனர். சென்னைக்கு வரும் வீரர்கள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்த பட உள்ளனர். தற்போது இலங்கை தொடரை முடித்துவிட்டு அங்கு இருந்து நேராக சென்னைக்கு வந்து இறங்கினர் இங்கிலாந்து அணியினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை வந்த வீரர்கள் தற்போது அங்கு இருந்து நேராக சென்னை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். மேலும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள பட உள்ளது. மேலும் ஹோட்டலில் தங்களது தளத்தை விட்டு வேறு தளத்திற்கு வீரர்கள் செல்ல கூடாது. மேலும் தனிமைப்படுத்தல் காலத்தில் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளனர். வீரர்கள் அனைவரும் சந்திப்பதற்கு 1 தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தான் அனைத்து வீரர்களும் சந்திக்கவேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல்:

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலம் வரும் 1ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. அதன் பிறகு இரு அணி வீரர்களும் தங்களது பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். தற்போது இங்கிலாந்து அணிக்கு புதிதாக ஓர் சிக்கல் எழுந்துள்ளது. அது என்னவென்றால் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு பயிற்சிக்கு வெறும் 3 நாட்களே கிடைத்துள்ளன.

ஹெச் 4 விசா கட்டுப்பாடு நீக்கம் – ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!!

சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அங்கு இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அதிக பயிற்சி தேவைப்பட உள்ளது. ஆனால் அதற்கான கால அவகாசம் அவர்களிடம் இல்லை. எனவே இது இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here