தமிழ் தேர்வுனு சொல்றதுல என்ன பிரச்சனை., தமிழக அரசிடம் தாறுமாறாக கேள்வி கேட்ட கல்வியாளர்கள்!!

0
தமிழ் தேர்வுனு சொல்றதுல என்ன பிரச்சனை., தமிழக அரசிடம் தாறுமாறாக கேள்வி கேட்ட கல்வியாளர்கள்!!
தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக அரையாண்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தேர்வுகள் இன்று நடைபெற இருந்த நிலையில் பள்ளிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாததால் மீண்டும் தேர்வுகள் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்த நிலையில் அதற்கான புதிய அட்டவணையையும் நேற்று தமிழக அரசு வெளியிட்டது. தற்போது இந்த தேர்வு அட்டவணைக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது தமிழ் தேர்வை தமிழ் என்று சொல்லாமல் லாங்குவேஜ் என்று ஏன் குறிப்பிட வேண்டும்.  மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு மூன்று மணி நேரம் ஒதுக்கப்படும். ஆனால் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணையில் 2 முதல் 4.30 மணி வரை என தேர்வு நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது உண்மையாகவே தேர்வு எழுத அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதா?? அல்லது அதிகாரிகள் கவனக்குறைவால் அட்டவணை தவறாக வெளியிடப்பட்டுள்ளதா?? என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here