இனிமேல் ரேஷன் கடையிலும் இ சேவை மையம் – நாடு முழுவதும் அமல்படுத்த அரசு முடிவு!!

0
இனிமேல் ரேஷன் கடையிலும் இ சேவை மையம் - நாடு முழுவதும் அமல்படுத்த அரசு முடிவு!!
இனிமேல் ரேஷன் கடையிலும் இ சேவை மையம் - நாடு முழுவதும் அமல்படுத்த அரசு முடிவு!!

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இசேவை மையம் இனி, நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும், திட்டத்தை  மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

மத்திய அரசு முடிவு:

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆதார் கார்டு,பான் கார்டு, பென்ஷன், பில் கட்டணம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஏராளமான அரசு திட்டங்களை எளிதாக பெற பொது சேவை மையங்கள் எனப்படும் இ-சேவை மையங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக 3 லட்சம் இ-சேவை மையங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இந்த சேவையை கிராமப்புற மக்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக, இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் ரேஷன் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில், 10,000க்கும் மேற்பட்ட கூடுதல் இ சேவை மையங்களை, ரேஷன் கடைகளுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நியாயவிலைக் கடைகளிலேயே பொதுமக்கள் இ சேவை மையத்தின்  சேவையைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவுக்கு, பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here