தனியார் ஊழியர்களுக்கு தொடரும் ஷாக்., Dunzo நிறுவனத்திலிருந்து 3% பேர் பணி நீக்கம்! வெளியான அறிவிப்பு!!

0
தனியார் ஊழியர்களுக்கு தொடரும் ஷாக்., Dunzo நிறுவனத்திலிருந்து 3% பேர் பணி நீக்கம்! வெளியான அறிவிப்பு!!
தனியார் ஊழியர்களுக்கு தொடரும் ஷாக்., Dunzo நிறுவனத்திலிருந்து 3% பேர் பணி நீக்கம்! வெளியான அறிவிப்பு!!

ஷேர்சாட் நிறுவனம் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து, தற்போது Dunzo நிறுவனமும் தங்களின் சுமார் 90 ஊழியர்களை நேற்று அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

வெளியான அறிவிப்பு:

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சமீபகாலமாக சில காரணங்களால் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப் படுகின்றனர். அந்த வகையில், sharechat நிறுவனம் தங்கள் நிறுவன பணியாளர்கள் 500 க்கும் மேற்பட்டோரை திடீரென வெளியேற்றியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து, மளிகை மற்றும் பல்வேறு பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனமான Dunzo, தங்கள் நிறுவனத்திலிருந்து 3% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி கபீர் பிஸ்வாஸ், தவிர்க்க முடியாத சில காரணங்களால் 90க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும், இந்த முடிவு தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர் திரும்புபவரா நீங்கள்? இந்த முக்கிய நியூஸ் உங்களுக்குத்தான்!!

இதுவரை வெளியான அறிக்கைகளின் படி தங்கள் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.229.1 கோடியாக இருப்பதாகவும், அதை ஈடுகட்ட இது போன்ற சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டி இருந்ததாகவும் நிறுவனத்தின் CEO விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here