இனிமே இந்த கறி சாப்பிடாதீங்க., வாய்க்கு வந்ததைப் பேசி வாங்கி கட்டிக் கொண்ட பிரபல மருத்துவர்!!

0
இனிமே இந்த கறி சாப்பிடாதீங்க., வாய்க்கு வந்ததைப் பேசி வாங்கி கட்டிக் கொண்ட பிரபல மருத்துவர்!!
இனிமே இந்த கறி சாப்பிடாதீங்க., வாய்க்கு வந்ததைப் பேசி வாங்கி கட்டிக் கொண்ட பிரபல மருத்துவர்!!

டாக்டர். ஷர்மிகா சரண் சித்த மருத்துவ படிப்பை முடித்து திருப்பூர் டெய்சி மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பிரபல சித்த மருத்துவர், பாஜக பிரமுகரான டெய்சி சரணின் மகள் என்பது பலருக்கும் தெரியும். பொதுவாக DR. ஷர்மிகா தனது யூடியூப் சேனலில் மக்களுக்கு பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகளை அன்றாடம் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் சமீப காலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணையதள பக்கங்களில் டாக்டர். ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்கள் மக்களால் வரவேற்கப்பட்டு இணையத்தில் பரவி வந்தது.அந்த வகையில் கடந்த வாரம் ஷர்மிகா இனி மக்கள் மாட்டிறைச்சியை உண்ண கூடாது, அது நமக்கு கடவுள் போன்றது, மேலும், அது நம்மை விட உருவத்தில் பெரியது என்பதால் அதை நாம் சாப்பிட்டால் செமிக்காது என்று கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(07.01.2023)-முழு விவரம் உள்ளே!

இப்படி தவறான கருத்தை மக்களுக்கு கூறிவரும் ஷர்மிகா மீது மற்ற மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் சித்த மருத்துவத்தில் மாட்டிறைச்சியை உண்ண கூடாது என்று எந்த இடத்தில் குறிப்பிடபடவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு பிறகு dr. ஷர்மிகா தான் பேசியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டு இணையத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here