தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆசிய நாயகன் சிவ தாபா, ரயில்வே அணி வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:
ஹரியானாவில், ஆடவருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 6வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 13 எடை பிரிவுகளின் கீழ் 386 வீரர்கள், பங்கேற்று உள்ளனர். இதில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 6 முறை ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற அசாமின் சிவ தாபா 63.5 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் இறுதி போட்டியில், ரயில்வே அணியின் அங்கித் நர்வாலை எதிர்த்து மோதினார். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சிவ தாபா, 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற, 57 கிலோ எடை பிரிவுக்கான இறுதி போட்டியில், சர்வீஸ் அணியின் முகமது ஹுசாமுதீன் ரயில்வே அணியின் சச்சினை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இந்த போட்டியில், முகமது ஹுசாமுதீன் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், 92 கிலோவுக்கு மேற்பட்ட எடை பிரிவுக்கான இறுதிப் போட்டியில், காயம் காரணமாக சாகர் விலகியதால், சர்வீஸ் அணியின் நரேந்தர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.