கொரோனா வைரஸிற்கு மதச்சாயம் பூசுவதா..? இந்தியாவில் தொடரும் அவலங்கள்..!

0

தற்போதைய சூழலில் நாட்டில் கொரோனா வைரஸ் பற்றிய பேச்சுகள்தான் எங்கு திரும்பினாலும் அடிபட்டு கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகள் தற்போது மத ரீதியாக பாதை மாற்றி விடப்பட்டுக் கொண்டிருக்கும் அவல நிலைக்கு நாம் உள்ளோம்.

இஸ்லாமிய மாநாடு

இஸ்லாமிய மாநாடு தான் காரணம் என்று திரும்ப திரும்ப வன்மம் தூண்டப்படுகிறது. இஸ்லாமியர்களிடம் தள்ளியே இருங்கள் என்று சங்பரிவார் அமைப்புகளால் தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேளையிலும், மறுபக்கம் அதன் எண்ணிக்கை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டிய சூழலிலும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்திலும் கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகள் தற்போது மத ரீதியாக பாதை மாற்றி விடப்பட்டுக் கொண்டிருக்கும் அவல நிலைக்கு நாம் உள்ளோம்.

கொரோனா வைரஸை விட வேகமாக பரவும் வதந்திகள் – மதுரை வாலிபர் தற்கொலை..!

Dargah Hazrat Nizamuddin in Delhi - History, How to Reach, Best ...

அதற்கு முக்கிய காரணமாக பேசப்படுவது டெல்லியில் நடைபெற்ற மாநாடு. இங்கு எப்போதும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக் குழு தங்கியிருந்து மதப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்கமாக நடைபெறும் பழமைவாய்ந்த மாநாடு என்றாலும், தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், அந்த மாநாட்டுக்கு சென்றவர்கள் மூலமே கொரோனா சமூக பரவலுக்கு சென்றது எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருவதால் இந்த விவகாரம் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

டெல்லி மாநாடு

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் உள்ள மர்காஸா கட்டடத்தில் அமைந்துள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மத வழிபாடு மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து, அம்மாதம் 21 முதல் 24 வரை 4 நாட்கள் தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு அவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

Delhi Nizamuddin Markaz : Jharkhand Based 36 scholars including ...

அந்த சமயத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டதால், மாநாட்டை உடனடியாக முடித்துக் கொண்டு பலர் மீண்டும் தமிழகம் திரும்ப முற்பட்டனர், இந்நிலையில் ஊரடங்கு காரணாமாக போக்குவரத்து தடைப்பட்டதால் கிடைத்த பேருந்து ரயில் மற்றும் விமானம்  மூலம் தமிழகத்துக்கு திரும்பி விட்டனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என அனுப்பி வைத்து விட்டு, தற்போது திடீரென கொரோனா என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை

அதுதவிர, இந்த மாநாட்டுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோரும் வருகை புரிந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 7,000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Coronavirus 6 People Dead Who Attended In Delhi Nizamuddin ...

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது எனவும், பலருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் பெரிய அளவில் நீடிக்கிறது. இது தொடர்பாக, மாநாடு நடத்திய மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இஸ்லாமியர்கள் மீது பெருமளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

முதல் கொரோனா தொற்று

மார்ச் 1ஆம் தேதி மலேசியாவில் நடந்த மாநாட்டின் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 690 பேருக்கு கொரோனா தொற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே மார்ச் 1ஆம் தேதிதான் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று நபர் கண்டறியப்பட்டார்.

Coronavirus outbreak: Safety measures at major airports and airlines

மார்ச் 7ஆம் தேதி தமிழகத்தின் முதல் கொரோனா வைரஸ் தொற்று நபர் கண்டறியப்பட்டார். இந்த நேரத்தில் டெல்லியில் மாநாடு நடத்த அனுமதி கிடைத்தது எப்படி என்பதும், மாநாட்டுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்பட்டட்து எப்படி என்பதும் தெரியவில்லை. அந்த மாநாட்டை ஏன் முன்னதாகவே அரசு தடை செய்யவில்லை.

சுற்றுலா விசா

மேலும், சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த வேளையில், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தும், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து மார்ச் 1,2ஆம் வாரங்களில் சுற்றுலா விசாவில் வந்தவர்களை அரசு ஏன் அனுமதித்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது கூறும் அரசு அவர்களை ஏன் முன்னதாகவே தடுத்து நிறுத்தவில்லை என்பன உள்ளிட்ட பல கேள்விகள் இயற்கையாகவே எழுகிறது.

மகா சிவராத்திரி

இந்த நேரத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியையும்  குறிப்பிட்டு சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு பிப்ரவரி மாதம் இறுதி வரை கொரோனா தொற்று இந்தியாவில் பரவவில்லை என நியாயம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், டிசம்பர் மாதத்திலேயே சீனாவில் பரவிய கொரோனா ஜனவரி, பிப்ரவரி மாதத்தில்தான் விஸ்வரூபம் எடுத்தது என பலருக்கும் தெரியாமல் போனது சோகத்தின் உச்சமா அல்லது அலட்சியமா என தெரியவில்லை.

World celebrates Maha Sivaratri with chants of 'Bam Bam Bholey ...

அதேசமயம், உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த நேரத்தில், ஈஷா கூட்டம், ட்ரம்ப்-மோடி மாநாடு என கிட்டத்தட்ட 29 மாநாடுகள், பெரு நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. அதில் ஏராளமான வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

ராமர் சிலை

அப்படி இருக்க, மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நிஜாமூதினில் கூட்டம் நடக்கிறது. அப்போது ஊரடங்கு உத்தரவு இல்லை என்பதையும் நினைவு கூர வேண்டும். மார்ச் 16ஆம் தேதிதான் டெல்லியில் 50 பேருக்கு மேற்பட்ட மதக் கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் மார்ச் 31ம் தேதி வரை நடத்தப்படக்கூடாது என்று டெல்லி முதல்வர் அறிவிக்கிறார். இதனையடுத்து, 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

சென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த காவல் ஆணையர்..!

அதன்பின்னர், மார்ச் 25ஆம் தேதி ராமர் சிலையை ஷெட்டில் இருந்து கோயில் கட்டப்படும் இடத்திற்கு நகர்த்தும் நிகழ்வு நடந்தது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் புடை சூழ அதில் கலந்து கொண்டார். அதனை யாரும் குறை கூறவில்லையே. ஆனால் டெல்லியில் நடைபெற்ற இஸ்லமிய மாநாட்டை நோக்கி மட்டும் அனைத்து விரல்களும் நீள்கின்றன. இஸ்லாமிய மாநாடு, இஸ்லாமிய மாநாடு என்று திரும்ப திரும்ப வன்மம் தூண்டப்படுகிறது. இஸ்லாமியர்களிடம் தள்ளியே இருங்கள் என்று சங்பரிவார் அமைப்புகளால் தொடர்ந்து சொல்லப்படுகிறது.

அரசு வழிமுறை

இத்தனைக்கும் ஊரடங்குக்குக்கு முன்னதாகவே நடைபெற்ற மாநாட்டிற்கு அரசு தடை விதிக்கவில்லை. இவ்வளவு பெரிய மாநாட்டுக்கு வந்தவர்கள் ஊரடங்கிற்கு பின்னர் போக்குவரத்து வசதியின்றி எப்படி திரும்புவார்கள் என்ற யோசனை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்போடும் அரசிடமும் இல்லை. ஏனெனில், மாநாடு நடந்த நேரத்தில் அரசுக்குமே கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே நிதர்சனம்.

What to know about social distancing strategies amid coronavirus ...

உண்மையில் இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது, மாநாடு குறித்தோ, கூட்டம் கூடியது குறித்தோ தவறு கண்டுபிடிக்காமல், குறைகள் கண்டுபிடிப்பதை நிறுத்திக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும். கொரோனா முதலில் பாதிக்கப்பட்டவரைச் சுற்றியுள்ள குடும்பத்தினருக்கு பரவி, பின்னர் சமூகத்தில் பரவும். எனவே, இந்த நேரத்தில் மத அரசியலுக்கு வழிகோழாமல் இருப்பதே சிறந்தது. எனவே அரசு பின்பற்றி வரும் வழிமுறைகளையும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்வதுதான் சிறந்த வழியாகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here