‘கலெக்க்ஷன், கமிஷன், கரெப்ஷன்’ உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு..!

0

திமுக இளைஞர் அணி சார்பில் குரூப் 2a, குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேட்டிற்கு சிபிஐ விசாரணை கோரி சென்னையில் திமுக இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டையே உலுக்கிய டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2a மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடுகளை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை சிபிஐ-க்கு மாற்றக்கோரி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் செயலர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை, பாரிமுனையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி., குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே, அரசு பணிகளில் இருப்பதை மாற்றி அமைக்கவே ஏற்படுத்தப்பட்டது. பல கனவுகளுடன், அரசு பணிக்கு முயற்சி செய்யும் இளைஞர்களுக்கு இந்த தரம் கேட்ட அரசு செய்த துரோகம் இது.தகுதியானவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, டி.என்.பி.எஸ்.சி., பணியமர்த்த வேண்டும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தில் தற்போது நடைபெறும் தரம்கெட்ட ஆட்சியில் நடைபெற்ற குரூப் 2a முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே திமுக தான். இந்த முறைகேடு தொடர்பாக, முறையான சி.பி.ஐ., விசாரணை நடக்க வேண்டும். இல்லையெனில், தி.மு.க., தொடர் போராட்டங்களை நடத்தும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது என, அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். ஜெயக்குமார் என்ற அவர் பெயரிலுள்ள இடைத்தரகரை தான், போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழக முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், பிரதமர் மோடியின் எடுபிடியாக செயல்படுகின்றனர். ‘கலெக் ஷன், கமிஷன், கரெப் ஷன்’ ஆகிய, மூன்றுக்கும் மட்டுமே, இந்த அரசு செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றி பெற்றது வெறும் இடைவேளை தான், சட்டசபை தேர்தலில் தான், ‘கிளைமாக்ஸ்’ உள்ளது என அவர் பேசினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here