கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு – ஸ்டாலின் கண்டனம்..!

1

கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை அவமதிப்பு..!

கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஜூலை 17 அதிகாலை அந்த சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்த திராவிட கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு சிலை தூய்மைப்படுத்தப்பட்டது. சிலை மீது காவிச் சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தியாவில் கொரோனா தொற்று ஆகஸ்ட் 10க்குள் 20 லட்சத்தை தாண்டும் – மத்திய அரசுக்கு ராகுல் எச்சரிக்கை..!

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!’ என தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. ஐயா ஸ்டாலின் அவர்களே, இருக்கிற இந்த நிலைையில் வாழ்வா ? சாவா? என்று மரணத்திற்க்கும் வாழ்விற்க்கும் போராடும் வேலையில், வெறும் கற்சிலை மீது காவி வீசினார்கள் சாவி வீசினார்கள் என்று வெற்று பேச்சில் அரசியல் வளர்க்காதீர்கள். உங்களிடம் உள்ள பல லட்ச கோடிகளை மக்களின் வறுமை நிலை போக்க தயாரா? என்று பேசுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here