தி.மு.க.வின் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் ரத்து வழக்கு? உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

0
தி.மு.க.வின் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் ரத்து வழக்கு? உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அதில் குறிப்பிட்டபடி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களையும் வாங்கப்பட்டு விரைவில் குடியரசுத் தலைவரிடம் தமிழக அரசு தரப்பில் சமர்ப்பிக்க உள்ளனர். இதற்கிடையில் இந்த கையெழுத்து பள்ளி மாணவர்களை வற்புறுத்தி வாங்குவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததால், மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் புகார் மனுவை இன்று (ஜன. 2) பரிசீலித்த நீதிபதிகள், “இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் சிறந்த அறிவாளிகளாக திகழ்கிறார்கள். அவர்களாக விரும்பி கையெழுத்திட்டதை எப்படி? தடுக்க முடியும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.” என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here