
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி கொண்டிருப்பவர் தான் சேரன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானவை. தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் வீட்டில் ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது இயக்குனர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு சேரனின் சொந்த ஊரான மதுரை மாவட்டத்தில் உள்ள பழையூர் பட்டியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.