நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் முட்டிக்கொள்ளும் தனுஷ் சிம்பு – உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் முட்டிக்கொள்ளும் தனுஷ் சிம்பு - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான தனுஷ் மற்றும் சிம்புவின் திரைப்படங்கள் நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்கத்தில் ஒன்றாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல் :

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோர் படங்கள் அடுத்தடுத்த நாளில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வந்தது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் மற்றும் சிம்புவின் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வெளிவந்து ரசிகர்களுக்கு ட்ரீட்டாய் அமைந்தது. இதையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷ் மற்றும் சிம்புவின் படங்கள் மீண்டும் மோதி கொள்ள தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படம், ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல், சிம்பு நடிப்பில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீண்டும் மோதும் சிம்பு மற்றும் தனுஷ் படங்கள் குறித்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here