இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்க கூடாது – டெல்லி முதல்வர் உத்தரவு!!

0
இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்க கூடாது - டெல்லி முதல்வர் உத்தரவு!!
இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்க கூடாது - டெல்லி முதல்வர் உத்தரவு!!

கடந்த அண்டை போலவே இந்த வருட தீபாவளிக்கும் டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்‍கவும் தடை விதிக்‍கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்திருக்கிறார்.

தீபாவளி சமயத்தில் பட்டாசு கொளுத்துவதால் அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது எனும் ‘சூழலியல்’ கருத்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, தீவிரமான பேசுபொருளாக மாறி உள்ளது. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பல அரசியல் தலைவர்கள் மக்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்க கூடாது - டெல்லி முதல்வர் உத்தரவு!!
இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்க கூடாது – டெல்லி முதல்வர் உத்தரவு!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் அங்கு நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு. தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் டெல்லியில் காற்று தரக் குறியீடு மிக மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்க கூடாது - டெல்லி முதல்வர் உத்தரவு!!
இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்க கூடாது – டெல்லி முதல்வர் உத்தரவு!!

இந்நிலையில் இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகையால் அனைத்து மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. ஆனால் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழு தடை விதிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here