டெல்லியில் 2,098 பேர் கொரோனாவுக்கு பலியா..? மாநகராட்சி வெளியிட்ட தகவலால் பரபரப்பு..!

0
corona delhi death
corona delhi death

கொரோனா நாடு முழுவதும் உயிர் பலி வாங்கி கொண்டு இருக்கிறது.இனித்த தலைநகரமான டில்லியில் நாளுக்கு நாள் பாதிப்பும் உயிர் சேதமும் அதிகரிக்கிறது.டில்லியில் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை தவறாக இருக்கிறது என  டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய்பிரகாஷ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் 85% பெற்றோர் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர் – கணக்கெடுப்பில் தகவல்..!

மகாராஷ்டிரா தமிழ்நாடை விட டில்லியில் தான் அதிகம்

delhi corona death
delhi corona death

கொரோனாவின் தாக்கம் பழியும் மகாராஷ்டிரா தமிழ்நாடு டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இறப்பு எண்ணிக்கை டெல்லி அரசு குறைத்து காட்டுகிறது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது என மத்திய அரசு சார்பில் வெளிவந்துள்ளது.மார்ச் 2020 முதல் ஜூன் 10, 2020 வரை டெல்லியின் மூன்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் சுமார் 2098 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் இதற்கான இறுதிச் சடங்குகளும் கொரோன வழிமுறை படி நடந்தது.இறந்தவர்களெல்லாம் கொரோனாவாழ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆவார்கள்.200 சந்தேக கொரோனா தொற்றுகள் குறித்த தனித்த ஆவணங்களையும் நாங்கள் கொடுத்துள்ளோம் என்றார்.ஆனால் இன்று வரை டெல்லி அரசு 984 கொரோனாவால் இறந்தவர்கள் என கூறி வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர கூறுகையில்

delhi municipal corporation
delhi municipal corporation

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று காலை சொல்லும்போது டெல்லியில் 32,810 பேர் கொரோனா தோற்று உள்ளவர்கள் இதில் 19581 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என்றார்.இந்நிலையில் 2098 பேர் பலியாகியுள்ளதாக வடக்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தரப்பில் இந்திய தலைநகரில், கொரோனாவால் மொத்தம் 2098 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், டெல்லி மாநில அரசு வெளியிட்ட கடைசிக்கட்ட தகவலின்படி, டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்கள் 984 பேர் மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.எனவே, டெல்லியில் உண்மையாகவே என்னதான் நடக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள். கொரோனா குறித்த உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here