பிரபல நட்சத்திர தம்பதிக்கு கொலை மிரட்டல்.. திரைத்துறையில் அதிகரிக்கும் பதற்றம் – போலீஸ் விசாரணை!

0
பிரபல நட்சத்திர தம்பதிக்கு கொலை மிரட்டல்.. திரைத்துறையில் அதிகரிக்கும் பதற்றம் - போலீஸ் விசாரணை!

பாலிவுட் நடிகை கத்ரினா மற்றும் விக்கி கௌசல் தம்பதிக்கு சமூக வலைத்தளங்களில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை மிரட்டல்:

பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கத்ரினா கைஃப். இவர் கடந்த 2021 ல் முன்னணி இளம் நடிகரான விக்கி விக்கி கௌசலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கத்ரினா. இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் சில மர்ம நபர்கள் நடிகை கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌசலுக்கு கொலை மிரட்டல் விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொலை மிரட்டல் குறித்து, மும்பை சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம ஆசாமிகளை தொழில்நுட்ப பிரிவு மூலம் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கத்ரினா கைஃப் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here