அலட்சியத்தில் உச்சத்தில் கோவை மக்கள் – பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்!!

0

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு கோவை மக்கள் ஒத்துழைப்பு தருவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்த மக்களின் எண்ணிக்கை கோவையில் அதிகரித்து கொண்டே உள்ளது.

ஆபத்து நிலையில் கோவை:

தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் 12 மணி வரையிலான தளர்வு மிகவும் ஆபத்தானது என கோவை மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மக்கள் யாரும் ஒத்துழைப்பு அளிப்பது போல் தெரியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாவசிய துறைகள் மற்றும் மருத்துவத்துறைகள் மட்டுமே இயங்க வேண்டும். மக்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கடுமையான நடவடிக்கை மட்டுமே நோய் பரவல், உயிரிழப்புகளை தடுக்கும்.

உயிரிழப்புகள் அதிகமாகும் நிலை உள்ளதால் அனைத்து மின் மயானங்களையும் தயார்படுத்தி வைத்திருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளுடன் காத்திருக்கின்றன. ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி, பெரும்பாலான மருத்துவமனைகளில் இல்லை. உயிருக்கு போராடிக் கொண்டிருப்போருக்கு செலுத்தப்படும், ‘ரெம்டெசிவிர்’ மருந்தும் தட்டுப்பாடாகவே இருக்கிறது

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இறப்பு விகிதம் அதிகமாகி வருவதால் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 10 மின் மயானங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா, ஆறு சடலங்கள் வீதம் பிரித்து அனுப்ப, சவக்கிடங்கு பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி நடப்பதன்மூலம் உயிரிழப்புகளை குறைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here