தமிழகத்தில் இந்த 4 மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0

தமிழகத்தின் மேல் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று(மே 12) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

13.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவவும்.

14.05.2021 அன்று நீலகிரி, கோவை, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 15.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிதமான கன மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 16.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கொரோனா அறிகுறி இருக்கா??உடனே இத செய்யுங்க!!சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை 7, தக்கலை 6, பெருஞ்சாணி அணை, சோழவந்தான் தலா 5, வால்பாறை, கலியால் தலா 4, நாகர்கோவில் 3, ஆண்டிபட்டி, சின்னக்கல்லார் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

12.05.2021 அன்று தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 13.05.2021 அன்று குமரிக்கடல் பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல், லட்சதீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னையில் மக்களை தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு மையம் – இன்று திறப்பு!!

14.05.2021 குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 15.05.2021 அன்று குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here