இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. தொற்று அதிவேகமாக பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் 3,66,161 பாதிப்படைந்துள்ளனர்

கொரோனா

இந்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,66,161 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.  இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 2,46,116  கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மற்றும் 37,23,446 தொற்றால் குணமாகாதவர்களின் எண்ணிக்கை ஆகும், இதுவரை 16,73,46,544 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார், அதில் தனது தொகுதியான பரேலியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. சுகாதாரத் துறையில் இருப்பவர்கள் தொடர்பு கொண்டால் தொலைபேசிகளை எடுப்பதில்லை, இது கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் சிரமத்தை உருவாக்கி வருகின்றது என கவலைகளை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மாநில தலைநகரான லக்னோவிலிருந்து சுமார் 250 கி.மீ. உள்ள மாநில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதை முதலமைச்சர் மறுத்ததோடு, “வதந்திகளை பரப்பும்” மக்களுக்கு எதிராக சொத்துக்களை பறிமுதல் செய்வது உட்பட பல வலுவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவரது புகார்கள் வந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here