தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.பி அழகிரி?? கசிந்த தகவல்!!

0

தமிழகத்தில் கடந்த மே மாதம் 2ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் தமிழகத்தில் ஓர் எம்.பி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி:

தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் கொரோனா நோய்பரவல் மிக கடுமையாக இருந்து வருகிறது. கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் மிக பாதுகாப்பாக தேர்தலை நடத்தியது. நடந்து முடிந்த சட்டப்பேரவையின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த மே மாதம் 2ம் தேதி நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியானது. ஐந்து மாநிலங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 4 மாநிலத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை சற்று ஆறுதல் அடைந்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘சீனாவின் 3ம் உலக போரின் ஆயுதம் தான் இந்த கொரோனா’ – அமெரிக்க அரசு பகிர் தகவல்!!

இந்நிலையில் தமிழகத்தில் ஓர் ராஜ்யசபா எம்.பி பதவியை காங்கிரசிற்கு ஒதுக்குமாறு திமுக கட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பதவியை பெற, இதில் யாரை காங்கிரஸ் தலைமை நியமிக்கும் என்று அனைவரிடமும் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால் எம்.பி பதவியினை காங்கிரஸ் தலைமை அழகிரிக்கு ஒதுக்க ஆதரவாக பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here