இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு – தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி.!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லி, மஹாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதை பற்றி சுகாதாரதுறை அமைச்சர் டிவீட்டரில் தெரிவித்துள்ளார்.

உயிர்கொல்லி கொரோனா வைரஸ்..!

இதுவரை உலக அளவில் கொரோனாவால் 3 லட்சத்து 37 ஆயிரத்து 42 பேர் பாதிப்படைந்துள்ளனர். 14 ஆயிரத்து 641 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலவரப்படி நேற்று மட்டும் மூவர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா கொடுமைகள் || Corona Troll Video in Tamil

உயிர் இறந்தவரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரதுறை அமைப்பு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா..!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கும், துபாயிலிருந்து வந்த 43வயது ஆண் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி – மின் கட்டணம் செலுத்த சலுகை..!

இருவரும் முறையே ஸ்டான்லி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவ்ற்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஸ்பெயினில் இருந்து வந்தவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தாய்லாந்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here