மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா வைரஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நல்வாழ்வுத்துறை அமைச்சர்!!

0
மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா வைரஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நல்வாழ்வுத்துறை அமைச்சர்!!

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்பொழுது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வா சுப்ரமணியன் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அதில், ஜே .என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதாக கூறினார். தெற்காசிய நாடுகளில் இந்த வைரஸின் பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதாகவும், இத்தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்தொற்று பரவலை எதிர்கொள்ளும் வகையில் 1.25 லட்சம் படுக்கைகள் மற்றும் 2000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் இருப்பதாக கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 350 கோடி கடன்…, முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here