இந்தியாவில் கொரோனா எந்த நிலைமைல இருக்கு?? – மத்திய அமைச்சகம் வெளியிட்ட விவரங்கள்!!

0

இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 31,923 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 பேர் இறந்துள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா நிலவரம்:

கடந்த 24 மணி நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை நாட்டில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  3,35,63,421 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்றைய மரணங்களின் எண்ணிக்கை 282 ஆக பதிவாகியுள்ளது.

எனவே மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,050 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இந்நோயில் இருந்து 31,990 பேர் மீண்டுள்ளனர். நாடு முழுக்க நேற்று 71,38,205 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக நாட்டில் இதுவரை 83,39,90,049 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here