இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா – முதல் இடம் வகித்த மகாராஷ்டிரா..!

0

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் அதில் 95527 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா

சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா நாடெங்கிலும் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோய் நாளுக்கு நாள் பரவ ஆரம்பித்தது. மார்ச் 23 இல் இந்த கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரசு இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் இருக்கிறது.

Coronavirus in India: How the Covid-19 pandemic affects India

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

குணமடைந்தவர்கள்

மேலும் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 198706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 204 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5598 ஆக உயர்ந்துள்ளது.

WHO launches global megatrial of the four most promising ...

இதுவரை 95527பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3708 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 97581 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

COVID-19: India reports 1st death as cases reach 73

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 70013 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 23495 பேருக்கும், டெல்லியில் 20834 பேருக்கும், குஜராத்தில் 17200 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here