கேரளா, மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு!!

0

தமிழகத்தில் தற்போது  கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளா மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா:

கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. எந்த ஒரு உலக நாடும் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. தற்போது அனைத்து நாட்டிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேச, சத்தீஸ்கர் மற்றும் மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. மேலும் போக்குவரத்து விதிமுறைகள் வழக்கம் போல் இருப்பதால் இந்த மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்களால் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு – ரூ.810 ஆக நிர்ணயம்!!

அதன்படி கேரளா மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக தங்களது வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்கள், இங்கு வந்த 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான முடிவுகளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here