அட கொடுமையே: இங்கேயும் கொரோனாவா?? – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
அட கொடுமையே: இங்கேயும் கொரோனாவா?? - அதிர்ச்சியில் பொதுமக்கள்!

அட்லாண்டாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் வசிக்கும் கொரில்லா வகை குரங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரங்குக்கு கொரோனா:

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கோவிட்19 வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி உள்ளது. இந்த வைரஸ் பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல லட்சம் உயிர்களை பறித்த இந்த கொடிய தொற்று நோய்க்கு தற்போது வரை தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வாக இருந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முழுவதும் கோவக்சின், கோவிஷீல்டு, மாடர்னா, ஸ்பைஸர், ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளை செலுத்தி, மக்களை இந்த நோயிலிருந்து காத்து வருகின்றனர்.

அட கொடுமையே: இங்கேயும் கொரோனாவா?? - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
அட கொடுமையே: இங்கேயும் கொரோனாவா?? – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

மக்கள் இந்த தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளும் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த தொற்றின் வேகத்தை சற்று கட்டுப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

அட கொடுமையே: இங்கேயும் கொரோனாவா?? - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
அட கொடுமையே: இங்கேயும் கொரோனாவா?? – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இந்த நிலையில், கொரோனா சார்ந்த வினோத செயல் ஒன்று அட்லாண்டாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் அரங்கேறி உள்ளது. அதாவது, இங்குள்ள பூங்காவில் வேலை பார்க்கும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. இது தெரியாமல் அவர் நாள்தோறும் பணிக்கு வந்துள்ளார். இதனால், அங்குள்ள 13 கொரில்லா வகையைச் சார்ந்த குரங்குகளுக்கும் இந்த தொற்று பரவியுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here