பிப்ரவரி மாத பொது முடக்க தளர்வுகள் – மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஆலோசனை!!

0

தமிழகத்தில் கொரோனா பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த கூட்டத்தில் கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கால பொது முடக்கம்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டும், பின்பற்றபட்டும் வருகின்றது. இதன் காரணமாக கொரோனா நோய் தொற்று பரவல் அதிகளவில் குறைந்தும் உள்ளது. அதிகாரிகள் அனைவரும் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மக்களுக்கு முறையாக பின்பற்ற வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் வாழ்வாதார நிலை கருதி தற்போது தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தினை அறிவித்து வருகின்றது.

கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை தகவலால் குடும்பத்தினர் நிம்மதி!!

தற்போது பெரும் அளவு அனைத்து இடங்களிலும் மக்கள் சென்று வந்தாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை அடுத்து அடுத்த மாதத்திற்கான பொது முடக்க தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

TN CM requests Yediyurappa to fill vacancies of Tamil teachers in Karnataka | Hindustan Times

அதே போல் இன்று மருத்துவ குழுவுடன் ஆலோசனையும் நடத்த உள்ளார். அவர்களுடன் இன்று பிற்பகல் 5 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆலோசனை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு பிப்ரவரி 2 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் அது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here