இயக்குனர் லோகேஷுக்கு உளவியல் சிகிச்சை?? 1000 ரூபாய் அபராதம்., நீதிமன்ற வழக்கால் பரபரப்பு!!!

0
 இயக்குனர் லோகேஷுக்கு உளவியல் சிகிச்சை

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அண்மையில் திரைக்கு வந்த ”லியோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டியுள்ளது. மேலும்  இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஒருவர் லோகேஷ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதாவது லோகேஷின் படங்களில் தொடர்ந்து பெண்கள் கொல்லப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று வருகிறது. இதனால்  இவருடைய  படங்களை பார்த்த ஒருவர் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதால் லோகேஷ் தனக்கு அபராதமாக 1000 ரூபாய் தர வேண்டும் என  கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் லோகேஷுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here