கொரோனா பரவ காரணமான சீனாவின் வுஹான் நகரில் கொண்டாட்டம்!!

0

உலகில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த சீனாவின் வுஹான் நகரில் வாட்டர் பார்க்கில் மிகப்பெரிய கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சிலர் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர், ஆனால் சமூக இடைவெளி, முகக்கவசம் எதுவும் இன்றி நெருக்கமாக அனைவரும் கொண்டாடியது உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரம்மாண்ட கொண்டாட்டம்:

மத்திய சீன நகரமான வுஹானில் நடைபெற்ற கொண்டாட்டம் தான் தற்போது பேசும் பொருளாக உள்ளது. ஏனென்றால் அந்த நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசால் தற்போது உலக நாடுகள் ஸ்தம்பித்து போய் உள்ளது. அங்குள்ள பிரபலமான வுஹான் பீச் வாட்டர் பார்க் ஒரு மின்னணு இசை விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. நீச்சல் உடைகள், வண்ண விளக்குகள் என நீரில் மிதந்தபடி நிகழ்ச்சி நடைபெற்றது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவை கட்டுப்படுத்த 76 நாள் முழு ஊரடங்கிற்கு பிறகு வுஹான் நகரம் படிப்படியாக திறக்கப்பட்ட பின்னர் ஜூன் மாதத்தில் நீர் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. வாட்டர் ஜெட் போர்டில் இசைக் கலைஞர் தனது பார்வையாளர்களுக்கு உற்சாக மூட்டினார். கூட்டத்தில் சிலர் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர், ஆனால் ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை கொன்று தீர்த்தது கொரோனா வைரஸ். ஆனால் அது பரவ காரணமாக நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. அங்கு ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டது. மேலும் மே மாத நடுப்பகுதியில் இருந்து அங்கு ஒரு கொரோனா வைரஸ் தொற்று கூட பதிவாகவில்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here